தமிழக தேர்தல் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தாலும்,மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது உறுதியில்லை.தி,மு,க,--அ,தி,மு,க -என்ற இரு கட்சிகளும் ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான்,என்பது அனைவரும் அறிந்ததுதான்.இரண்டு கட்சிகளும் மாறி மாறி வந்துகொண்டுதான் இருக்கும்,இரு கட்சிகளும் கொள்ளை அடிப்பதில் வல்லமை படைத்தவர்கள்.
இந்த இரு கட்சிகளும் கருத்துவேறு பாட்டினால்,சுய நலத்திற்க்காக பிரிந்த கட்சிகளாகும்,இரு கட்சிகளும் மக்களை பேச்சால் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.நம்முடைய பேச்சை மக்கள் நம்பி ஏமாறுபவர்கள் என்பது இரு கட்சிகளுக்கும் தெரியும்.இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு கூலியை கொடுத்து ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுவிட்டது,
மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் ரத்தவெறி பிடித்தவர்கள் இவர்களை விட்டால் நமக்கும் கதியில்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்ப்பட்டுவிட்டது.
தன்னலம் கருதாத தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்துறார்,ராஜாஜி,காமராசர்,பக்தவச்சலம்,சுந்தரவடிவேல்.சுபரமனியன்.போன்ற தலைவர்கள் இந்த த்மிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்கள்.மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டு மக்களை அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைய வைத்தார்கள்,அந்த துய்மையனவர்களை,பகுத்தறிவு என்ற பேரால் மக்களை பேச்சின் மூலமாகவும் திரைப்படத்தின் மூலமாகவும்.மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்களாகும்.
இவர்கள் வந்ததிலிருந்து மக்கள் ஒழுக்கம் குறைந்துவர்களாக மாறிவிட்டார்கள்.
ஆட்சிக்கு வருபவர்கள் முதலில் தனிமனித ஒழுக்கம் தேவை,அவர்களே ஒழுக்கம் இல்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனில் அக்கறை என்பது யாருக்கும் இல்லை.
மக்கள் ஒழுக்கமுள்ள நேர்மையுள்ள,சுயநலமில்லாத விபரம் தெரிந்த நல்லவர்களை தேடி கண்டு பிடித்து ஆட்சியில் அமரவைக்கும் காலம் எப்பொழுது வருமோ அப்பொழுதுதான் நம் நாடும் நாட்டுமக்களும் நலமுடன் வாழ முடியும் .அதுவரையில் நாடு உருபடியாகாது மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது.வள்ளலார் எப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிரார்கள்
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க ---தெருனயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்
எல்லோரும் வாழ்க இசைந்து .
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக -- நச்சரவ
மாத்திக் கொடிய உயிர் அத்தனையும் போய்ஒழிக
நீதிக் கோடி விளங்க நீண்டு .
என்கிறார் வள்ளலார் மக்களை வழி நடத்தும் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார் .
இனிமேலாவது நல்லவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்ச்சி செய்யுங்கள்.
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக