குழ்ந்தை சிரித்தது !
ஐந்து மாத குழந்தை சிதம்பரம் நடராஜர் சன்னதியில்
சிரித்த அதிசயம் .
பிறந்த ஐந்தே திங்களான குழந்தை ,தந்தை அருகிலிருக்க
தாய் அருகிலிருக்க ,உலகம் ஓசைபட ,ஆண்டவன் ஆனந்தத்
தாண்டவமாட ,திருத்தில்லையிலே ,நடராசர் சன்னதியிலே ,
திரைவிலக்க ,அப்பைய்யர் தீட்சர் ஆராதனை செய்கையில்
நடராசர் சன்னதியை நோக்கிக் கல கலவெனப் புன்னகை
பூரிக்க அப் பச்சிளங்குழந்தை சிரித்தது .கண்டோர் எல்லாரும்
வியந்தனர் ,கொண்டோர் குதூகலித்தனர் ,ஆராதித்தோர்
அதிசயித்தனர் .
பசி எடுத்தால் அழும் ,பார்த்தமுகமானால் சிரிக்கும் ,
வேறுமுகமானால் வீரிட்டு அழும் ,தில்லைக்கு முன்பின்
செல்லாத குழந்தை ,திரு உருவைக் காணாத குழ்ந்தை ,
கண்டோர் வியக்க சிரிக்க காரணம் என்ன ?
உலக வரலாற்றிலே கடவுளுக்கு உருவம் இல்லாது
இருக்கும் இடம் சிதம்பரம் தில்லை நடராசர் சன்னதியாகும் .
அங்கே உருவமுள்ள பல பொம்மைகளை வைத்து வழிபாடு
செய்கிறார்களே எனறு நினைத்து சிரித்தது .
கடவுளுக்கு உருவமில்லை என்பதை நம் முண்ணோர்கள்
அறிந்து ,சிதம்பர ரகசியம் என்பதை திரைபோட்டு மறைத்து
வைத்துள்ளார்களே என்பதை பார்த்து சிரித்தது .
உருவமற்ற ஒளியான உண்மைக் கடவுளை எனக்கு
காட்டிவிட்டாயே என்பதை எண்ணி சிரித்தது,எல்லா
உலகத்திற்கும் இந்த உண்மையை பறைசாற்றுவேன்
என்பதை நினைத்து சிரித்தது .
உண்மை ஒளியான அருட்பெருஞ்ஜோதியை உலகம்
முழுவதும் காணவைப்பேன் என்பதை சிரிப்பின் மூலம்
தெரியப்படுத்தி சிரித்தது.
அந்த அருட் குழந்தைதான்;---------- திரு அருட்பிரகாச
வள்ளலாராக,அருட்பெருஞ்ஜோதியாக இன்று உலகத்தை
ஆட்சி செய்து கொண்டு இருப்பவராகும்.
வள்ளலார் தாய் தந்தையர் உடன் தில்லையில்
ஐந்து மாத சிறுகுழந்தையாக தரிசனம் செய்தபோது
அருட்பெரும்ஜோதி தனக்கு தெரிவித்ததை ,அருட்பா
பாடலில் தெரியப்படுத்துகிறார் ,
பாடல் ;--
தாய் முதலோ ரோடு சிறு பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
மேய்வகை மேற் காட்டாதே என்தனக்கே யெல்லாம்
வெளியாகக் காட்டிய வென் மெய்யுருவாம் பொருளே
காய்வகையில்லா துளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் மெனைப் பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணிமன்றில் நடம்புரியும்
ஜோதி நடத்தரசே என சொல்லும் மணிந்தருளே.
என்னும் பாடலில் சிறுகுழ்ந்த்தையாக இருக்கும் போதே
திரைகள் எல்லாம் நீக்கி உண்மை நிலையை உணர
உணர்த்திவிட்டாய் .ஜோதி நடத்தரசே! இனி எனக்கு
எந்த மறைப்பும் இல்லாமல் ,இந்த உலகத்திற்கு
சொல்லுவேன். என் சொல்லை அனைத்து உலகமும்
ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்க்கு நீங்கள் அருள்புரிய
வேண்டும்.துணையிருக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுகிறார் குழந்தையான திரு அருட்பிரகாச வள்ளலார்
அவர்கள்.
உலகநிலை;--
சாதி ,சமயம் ,மதம் என்ற பிரிவினையால் வீதியில்
நடமாட முடியாதவர்களின் உள்ள வேதனைகள்
உலகமெங்கும் எதிரொலித்தது .சாதி மத சமயபினக்குகளால்
சண்டையிட்டு மண்டை உடைந்தவர்களின் எண்ணச
சிதறல்கள் விண்ணுலகை வியக்கவைத்தது .உழைக்காமல்
தழைக்க எண்ணியவைகளின் சுரண்டல்கள் ,ஏழைகளைக்
கண்கலங்க வைத்தது .உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் என்னும்
பிரிவினை தலைவிரித்து ஆடியது .
கடவுள் கொள்கைகளில் ;--
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச சமயா தியை மெச்சு கின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல்விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித்து அவருக்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே .
என்னும் பாடலில் தெயவங்கள் பலபல எனறு
வழிபடுபவர்களுக்கு ,வணங்குபவர்களுக்கு சுத்தமாக
அறிவே இல்லை என்கிறார் வள்ளலார் .
அவர்களுக்குஅறிவை புகுத்தி உண்மையை
எடுத்துரைக்க எனக்குஆற்றலை கொடுக்க வேண்டும்
எனறு விண்ணப்பம்செய்கிறார் வள்ளலார் அவர்கள் .
.எனக்கு தெளிவித்ததைப்போல் அனைவருக்கும்
தெளிவிக்க வேண்டும் என்கிறார்.
இந்த செயல்களை எல்லாம் முடிவுக்குக் கொண்டுவர
எண்ணி ,அருட் செங்கோல் இயற்றும் அருட்பெரும்ஜோதி
இறைவனின் திருச்சபையைக் கூட்டுகிறார் இறைவன் .
அத்திருசபையின் அனுமதியின் நீதிப்படி ,சட்டப்படி
ஓர் பக்குவமுள்ள அணுவை அழைத்து .பஞ்ச பூத
உலகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது .அந்த அணுதான்
வள்ளலார் என்னும் பெயருடைய உயிரொளி அணுவாகும் .
பாடல் ஒன்று ;--
அகத்தே கருத்துப் புறத்து வெளுத் திருந்த
உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்
அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு
என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே .
என்பதை தெளிவுபடுத்துகிறார் வள்ளலார் அவர்கள் .
தலைமகனே நீ தரணிக்குச சென்று உலகத்தை
மாற்றவேண்டும் எனறு ஆணை இடுகிறார்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .
மனிதன் சாகப்பிறந்தவன் அல்ல, என்றும் நிலைத்து
வாழ்ப் பிறந்தவன் ,வாழும் வகை தெரியாது சென்று
மடிகிறான் .வழிக்கு துணைவருவான் போல வந்து
நடுவழியில் பயம்காட்டிப் பணம் பறிக்கும் பாதகரை,
நன்னெறியில் செலுத்த வேண்டும் .
பட்டினி கிடப்பாரை பார்த்தும் பாராது ,பழங்கஞ்சி
யாயினும் வழங்க நினையாது ,வட்டிமேல் வட்டியிட்டு
வாங்கிப் பெட்டியை நிரப்பி வைத்தாளும் பேயரைத்
தூயராக்க வேண்டும் .ஆபத்தில் உபகாரம் செய்வதுபோல்
சிறு பொருளைக் கொடுத்து ,அத்தனையும் அபகரிக்கும்
மோசம் செய்யும் நாசக்க காரர்களை திருத்தி நேசமுண்டாக்கு .
மதியை கெடுத்து மரணமெனும் வழக்கைப் பெருக்கி
இடர்படும் ஓர் விதியைக் குறித்த சமய நெறியில்
விரைந்தோடும் ,மாந்தரை ,இறவா,பிறவா நிலையருளும்
சுத்த சன்மார்க்கத்திற்குத் திசை திருப்பு .கொள்ளைவினை
கூட்டுறவால் கூடிய கூட்டத்தையும்.அக் கூட்டத்திலிருந்து
வரும்படி மக்களைக் கூவி அழைத்து , கள்ளத் தனமுடைய
பல கலைகளை சொல்லி ,அக்கலைகள் காட்டும் பொய்யான
கடவுள்கள் ,அக் கடவுள்கள் காட்டும் பொய்யான காட்சிகள்
அக் காட்சிகளால் ஏற்படுகின்ற கதிகள் ,இவைகள் எல்லாம் ,
உண்மை அல்ல, பொயஎன்பதை உணர்த்தவேண்டும். .
இவையாவும் தெருவதிலே சிறுகால் வீசி விளையாடுகின்ற
சிறு பிள்ளை வளையாட்டு கூட்டம் என அறிவித்து ,
மனிதர்களைப் புனிதர்களாக்கும் ,சுத்த சன்மார்க்கப்
பாதையில் நடைபோடச செய்யவேண்டும் .தொல்லைக்
குடும்பத் துயரதனில் காலத்தை வீணாகத் தொலைத்து
அல்லல் பட்டு சிக்கி தவிக்கும் மக்களை,அதனிலிருந்து
நீக்கி அல்லல் அறுத்து ,ஆனந்தமாக்கவேண்டும் .
கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்!
என்பதை உலகமக்கள் அனைவரும் ,உணரும்படி
உணர்த்தவேண்டும்.என்பது ,அருட்பெருஞ் ஜோதியின்
கட்டளையாகும் ,அதை சிரமேற்க் கொண்டு செயல்
பட்டுக்கொண்டு இருக்கிறார் வள்ளலார் அவர்கள் .
இம்மாபெரும் பணியை செய்ய நம்மால் முடியுமா
என மயங்குகிறது அச்சிருவயது குழ்ந்தை .
குழந்தாய் ,இதுவரையிலும் இது போன்ற பணிபுரிய
நிறைய தூதுவர்களை அனுப்பினோம் ,அவர்களில்
ஒருவர் கூட கொடுத்த பணிகளை முழுமையாக
செய்யவில்லை ,செய்யத்தவறி விட்டார்கள் .அவர்கள்
அனைவரும் உண்மையை சொல்லாமல் ,பொய்யே
சொல்லிவிட்டார்கள் ,ஆதலால் உலக உயிர்கள் அதிக
துன்பத்திற்கு தள்ளப் பட்டுவிட்டன .
நீ எனது தலைப் பிள்ளை யானதினாலே இப்பணிக்கு
தகுதிஎனப் பணித்தேன் ,கலங்காதே ,மயங்காதே மனதில்
வேறொன்றும் எண்ணித் தயங்காதே ,துவளும் போது
தோள்கொடுப்போம் ,மயங்கும்போது உடன் இருந்து
மயக்கம் போக்குவோம் ,சென்றுவா ! உலகில்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிலை நாட்டி
வென்றுவா !என ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறார்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பெரோளியாகும் .
தலைவனின் தலைமகன்தான் தரணியில் உள்ள
இராமையா ,சின்னமைக்கு ஐந்தாவது குழந்தையாகப்
பிறந்து ஐந்து திங்களிலே நன்றி கூற தில்லை நடராசர்
சன்னதிக்கு மலர் மாலையுடன் சென்றபோது ,
திரை விளக்கி அப்பயையர் ஆராதனை செய்தபோது
கடவுள் காட்சிக் கொடுத்துள்ளார் .அக்கடவுள் உருவம்
அற்றவர் ,ஒளியாக உள்ளார் என்பதை உணர்ந்து
கொள்கிறது அக் குழ்ந்தை .
பூவுலகத்திற்கு பொதுப்பணி புரியவும், பொய்யுலகில்
மெய்ப்பணிப் புறியவும்,பொய்யும் மெய்யும் நிறைந்த
உடலில் புகுந்து இருக்கிறேன் ,பக்கத்துணையாய் இருந்து
பார்த்துக் கொள்கிறேன் ,பயம் இல்லாமல் பணிபுரியவும்
உற்ற துணையாய் இருந்து உதவிபுரிகிறேன் .உச்சி மீது
வானிடிந்து விழுவதாக இருந்தாலும் ,உள்ளம் கலங்காது
உண்மையை பேசு, .உண்மையை நிலைநாட்டு .ஒளியும்
வெளியுமாக இருந்து ,உபதேசித்ததைக் கண்டுதான்.
தில்லையிலே அக்குழ்ந்தை கலகல வென்று சிரிப்பொலி
எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது .
அந்த சின்னக் குழ்ந்தையின் சிரிப்பு வெற்றுச சிரிப்பு அல்ல
வீதியில் நடவாதே எனற சாதிக்கொடுமையை ஓட்ட
வந்த சிரிப்பு ,வெற்றிச சிரிப்பு .
தோன்றுவதும், பிரிவதும்,மாய்வதும் ,சூழ்ச்சியில்
பட்டு உழல்வதும்,தொல்லுலகில் பிறப்பு ,இறப்பு என்ற
ஏட்டைக் கிழித்து இறவா ,பிறவா நிலையில் ஏற்றுவிக்கப்
போவதை அறிவிக்கும் சிரிப்பாகும் .
பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் பல சமயங்கள்
மதங்கள் என்ற பவ நெறி பரவியது .அதனால் மக்கள்
உண்மை நெறி அறியாது பெரிய இருள் அடைந்தனர் .ஆதலின்
இனிமேல் அப்புன்நெறி தவிர்த்து பொது நெறி யெனும்
சுத்த சன்மார்க்கத் தன்னெறி செலுத்தப் போவதாக
அறிவிக்கும் சாந்தமுள்ள சிரிப்பாகும் .
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது ,
எவ்வுயிரும் தன்னுயிர் என எண்ணாது ,கொலையும் ,
புலையும் ,குடியும் பெரிதெனக் கொள்வது ,போன்ற
அகம் கருத்துப் புறம் வெளுத்து இருப்பவரைத் திருத்தி
அவர்களைச சன்மார்க்க சங்கத்தில் அடைவித்து ,
நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டுவதை
அறிவிகக் போவதை அறிவிக்கும் அற்புத சிரிப்பாகும் .
அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு