அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 22 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி ;--பாகம் ,9




       நம்முடைய தலைவராகிய அருட்பெரும் ஜோதிக கடவுளை 

நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் 
சாவியாகிய அருள் வேண்டும்.

இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது ,

இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால்வராது ,

ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு .

இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது,அல்லது துவாரம் 

யாதெனில் ;--

அருட்பெரும்ஜோதியின் பெருமையையும் தரத்தையும்---நம்முடைய 

சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும் .

அனனிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே 

ஜீவகாருண்யமாகும்.இதுதான் அருளை அடைந்து 

முத்தியடைவதற்கு முதல்படியாயிருக்கிறது,ஆதலால் 

இதைபாதுகாத்தல் வேண்டும் .

ஜீவகாருண்யத்தால் சுத்ததேகம்,பிரணவதேகம்,முதலியவைகளை 

பெற்றுக்கொள்ளலாம்,பின்பு ஞான தேகத்தை கடவுள் அருளால்

கொடுக்கப்படும்.

எப்படி என்னில் ;--

அருட்பெரும்ஜோதிக் கடவுள் ,சர்வஜீவ தயாபரன் சர்வவல்லமை 

உடையவன்.ஆகையால் நம்மையும் சர்வஜீவதயவு உடையவர்களாய் 

சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனிததேகத்தில் 

வருவித்தார் .

ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் கேளாத கேள்வி 

முதலிய மகா அற்புதங்களான்;--இறந்தார் எழுதல் முதலிய அற்ப்புத 

வல்லமைப் பெற்றிருப்பார்கள்.எந்த சீவர்களிடத்தில் 

தயாவிருததியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த 

சீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும்.

மற்றவர்களிடத்தில் காரியப்படாது .ஆதலால் மலஜலசங்கல்ப 

காலங்கள் தவிர மற்ற காலங்களில், கடவுள் இடத்தில் 

பக்தியும்,சீவர்களிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் 

கடவுள் தயவும் ஜீவதயவும்;---

தயவென்பது இரண்டு வகைப்படும்;--

யாவையெனில் ;---கடவுள் தயை ---ஜீவ தயை ஆகிய இரண்டு ,

கடவுள் தயை என்பது ;--

  1. இறந்த உயிரை எழுப்புதல் 
  2. தாவரங்களுக்கு மழை பெய்வித்தல் 
  3. மிருக ,பட்சி ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்,ஊட்டி வைத்தல் 
  4. சோம சூரிய அக்கினி பிரகாசங்களை,கால தேச வண்ணம் பிரகாசம் செய்வித்தல் ,
  5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல் ,
  6. அபக்குவிகளைச செய்யவேண்டிய அருள் நியதியின்படி தண்டனைசெய்வித்துப் பக்குவம் வருவித்தல்.
 ஜீவ தயை என்பது ;--
  1. தன் சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகரித்தல் .
  2. எவ்வுயிரையும் தன் உயிர் போல் பாவித்தல் 
  3. ஆன்மநேயத்துடன் தொடர்பு கொள்ளுதல் 
  4. எந்நேரமும் தயவு வடிவமாய் இருத்தல் 
மேலும் இவைகளபடிப்பால் அறியக்கூடாது,அறிவது எப்படி 

என்னில்;--ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாய் நிற்கும் 

விசார சங்கல்ப்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் ,

அததருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் 

ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியில் பழகல

வேண்டும் .

உலகத்தில் உள்ள அன்பர்கள் அனைவரும் உண்மைக்டவுள் 

அருட்பெரும்ஜோதி என்னும் ஆற்றல் மிக்க அணுதான்தான் 
  
என்பதை உணர்ந்து ,தொடர்புகொள்வோம் .

நன்றி ;--மீண்டும் பூக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக