அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 18 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி;---பாகம் ,7

 .  
        உண்மைக்கடவுள் யார் என்பது ,தெரியாமல் இவவுலகமக்கள்,
கண்டதெல்லாம் கடவுள் என்று நம்பி ஏமாநது வீணாக அழிந்துக 
கொண்டு இருக்கிறார்கள்.,என்பதை உணர்ந்த வள்ளலார் ,உண்மைக் 
கடவுளை, இவுலகமக்களுக்குஉணர்த்த வேண்டும் என்பதே ,
வள்ளலாரின் சுத்த  சன்மார்க்க கொள்கையாகும் .
அருட்பெரும்ஜோதி என்னும்உண்மைக்கடவுளைப்  பல கோணங்களில் ,
தெரியபடுத்துகிறார்.
கீழே கண்டபாடலில் எப்படி தெரியப்படுத்தி உள்ளார் என்பதை ப்
பார்ப்போம் .
அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்கள் எலாம் பொருகள்கள்
ஆனவெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டு கொண்டு மேலும் 
கொள்வதற்ககே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக 
கண்டமெலாங்கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங் 
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் 
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம்வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டேகண்டீர்,


 உண்மை யானத் தனிக்கடவுள் அருட்பெரும்ஜோதி 
என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் பின்வரும் பாடலைப்பார்ப்போம் .


அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 
அமைந்த சராசர அளவு எவ்வளவே அவ்வளவும் 
கண்டதுவாய் அங்கு யவைகள் தனித்தனியே யகத்துங்
காண்புறத்தும் மகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க 
விண்டகு பெரருட்ஜோதிப் பெருவெளிக்கு நடுவே 
விளங்கி ஒருபெருங் கருணைக் கொடிநாட்டி அருளாம் 
தண்டகுமோர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் 
தனியரசே என்மாலை தாளில் அணிந்துதருளே ..


என்று யாவரும் புரியும்படி தமிழில் தெளிவாக எழுதியுள்ளார்,
படித்து தெரிந்து கொள்வோம் ,
அடுத்து வரும் பாடலில் ,வேதங்கள் ,ஆகமங்கள், புராணங்கள் 
இதிகாசங்கள். விஞ்சானிகள் .மற்றும் உள்ளஅனைவரும் 
பல  சாதனங்களை கொண்டு அளந்து  அளந்து பார்த்தும் ,கடவுளைக 
கண்டவர் யாரும் இல்லை ,என்பதை வள்ளலார் கீழ காணும் 
பாடலில் தெரியப்படுத்துகிறார் .


கிளைக்கின்ற மறை அளவே யாகமப் பேரளவுகளைக்
கிளந்திடு மெய்சசாதனமா மளவை யரிவு அளவை 
விளக்குமிந்த அளவைகளைக்கொண்டு நெடுங்காலம் 
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே 
அளக்கின்ற கருவிஎல்லாம் தேய்ந்திட கண்டார்றேல் 
அன்றி ஒருவாறேனும் அளவுகண்டாரிலையே 
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு புரிந்து உரைத்தேன் 
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்க்ப்படுமோ.


என்று வள்ளலார் தாம் கண்ட அருள் அனுபவங்களை
தெளிவுப்படுத்தியுள்ளார் .உண்மைகளை உலகிற்கு
சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் தான் என்பதில் 
எந்த சந்தேகத்திற்கும் இடம் இல்லை .வள்ளலார் காட்டிய 
சுத்த சன்மார்க்க நெறியை  உலக மக்கள் அனைவரும்
கடைப்பிடித்து, உண்மை உணர்ந்து உயர்ந்த நிலைக்கு 
செல்வோம் .
நன்றி ;---மீண்டும் பூக்கும், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக