அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழ் மொழி பாகம் ;--3

       வள்ளலார் புகழ் தமிழகமெங்கும் பேசப்பட்ட காலத்தில்

இந்தியாவில் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்கள் அனைவரும் 

வள்ளலாரிடம் வந்து தெளிவுபெற்று செல்வது வழக்கமாக

கொண்டு இருந்தார்கள் .

ஒருமுறை அப்போதைய வடநாட்டுப் பெரியோர்களும்,

அவர்களுடன் காஞ்சி பெரியார் சங்கராச்சாரியாரும் 

வந்து இருந்தார்கள் அப்போது வள்ளலாரை சந்திக்க 

அனைவரும் விரும்பினார்கள்.

தங்களுக்கு தெரிந்த அன்பர் ஒருவர் மூலம் அவரிடம் 

இதுபற்றிய செய்தியைக் கூறினார்கள்.அவர் வள்ளலாரின் 

தலைமைச்சீடர் தொழுவூர் வேலாயுதம் அவர்களிடம் 
விபரத்தைக்கூறினார்.

செய்தியைக் கேள்விப்பட்டதும், வள்ளலாரும்,சங்கராச்சாரியாரும் 

சந்திக்க ஒப்புக்கொண்டார்கள்.உடனே வேலாயுதம் 
சந்திக்க ஏற்பாடு செய்தார்.

சங்கராச்சாரியார் வள்ளலாரை வரவேற்று அமரச்செய்தார் ,

பின்பு சமஸ்கிருத மொழிகளில் சில வினாக்கள் எழுப்பி 

விளக்கங்கள் கேட்டார்.வள்ளலார் அதற்குத் தகுந்த 

விளக்கங்களை தந்தார்.

தொடர்ந்து வள்ளலாரும் சங்கராச்சாரியாரும் ,நீண்ட நேரம் 

பல,பல உலக விஷயங்களைப்பற்றி விவாதம் செய்து 

வந்தார்கள்.அப்போது சங்கராச்சாரியார் சமஸ்கிருத மொழியின் 

உயர்வைப்போற்றி கூறியதோடு ,அனைத்து மொழிகளுக்கும் 

தாயாக விளங்குவது சமஸ்கிருத மொழிதான் என்றார் .

உடனே சற்றும் தாமதிக்காமல்,சமஸ்கிருதம் தாய் மொழி 

என்றால்,தமிழ் தந்தை மொழி என்றார் .அத்துடன் தமிழின் 

சிறப்பையும் ,தமிழ் எனற சொல்லின் மெய்ப்பொருளையும்

விளக்கமாக எடுத்து உரைத்தார் .

;தமிழ் ;என்பது ,த் --அ-- ம்--இ-- ழ்,என்னும் ஐந்து 

அலகுநிலையுடையது.த் --ம் --ழ் ,என்பது ஜடசித்கலை.

அ.இ ,என்பது சித்கலை.

தமிழ்மொழி, கற்பதற்கு எளிமை யானது ,ஒலிலேசானது,

மென்மையானது ,கவிதை எழுதவும் ,பாடம் செய்யவும், 

இனிமையானதும் ஓசை அருமையிலும், அருமையாயும் ,

உள்ளது தமிழ்மொழியாகும் என்றார் வள்ளலார் ,

மற்றும் மற்ற மொழிகள் போல் எந்தவிதமான,ஆராவாரமோ 

சொல் ஆடம்பரமோ இல்லாதது, 

எந்தமொழியின் சந்தத்தையும் தன்னுள் அடக்கிவிடும் ,

ஆளுமைத் தன்மையுடைய மொழியாகும் .


இறைத்தன்மையோடு இணையும் தகுதியும் தன்மையும் உடையமொழியாகும்.

இறை அருளை எளிதில் பெற வாய்ப்பு உடைய மொழி

தமிழ் மொழியாகும் .எல்லா மொழிகளைவிட கூடுதல்
ஆற்றல் பெற்ற மொழி தமிழ் மொழியாகும்.

என்று பல நிலைகளில் சங்கராச்சாரியாருக்கு 
தமிழ் மொழியின் 

சிறப்பை அனைவரும் புரியும்படிவிளங்கக கூறினார்.

வள்ளலாரின் அடக்கம் பொறுமை எளிமை இவற்றுடன்,

அவரது தனிப்பெரும் ஆற்றலைக் கண்டு சங்கராச்சாரியார் ,

மற்றுமுள்ள அனைவரும் அவரை வெகுவாக பாராட்டிப் 

புகழ்ந்தனர்.என்பது வரலாற்று செய்திகளாகும் .

வள்ளலார் தமிழில் ஒருபாடல் ;--

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச 

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே 

தனித்த நறுந்தேன் பெய்து பசும்பாலும் தெங்கின் 

தனிப்பாலுஞ் சேர்த்துதொரு தீம் பருப்பிடியும் விரவி 

இனித்த நறு நெய்யனைந்தே இலஞ் சூட்டின்இறக்கி 

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே

அநித்த மறத் திருப்பொதுவில் விளங்கு நடத்தரசே 

அடிமலர்க்கென் சொல்லணியா அலங்கல் அணிந்தருளே 

என்று தமிழின் சுவையைப் பாடியுள்ளார் வள்ளலார் .

வள்ளலார் காட்டிய உலக பொது நெறியாகிய ,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை கடைப்பிடித்து, 

உலக உயிர்கள் அனைத்தும், நளமுடன் வாழ எல்லாம் வல்ல 

அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பிக் 

கேட்டுக் கொள்கிறேன் .


வாழ்க தமிழ் ,


வளர்க உயிர் இனங்கள் .

நன்றி ;--மீண்டும் பூக்கும். 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக